Categories
மாநில செய்திகள்

தொகுதியை மாற்றிய முக்கிய அமைச்சர்…. வெளியான தகவல்..!!

வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் ராஜேந்திரபாலாஜி ராஜபாளையத்தில் போட்டியிடுகிறார்.

தமிழகத்தின் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. அனைத்து கட்சியினரும் தங்களது வேட்பாளர் பட்டியலை அறிவித்து வருகின்றனர். அதிமுகவும் தனது வேட்பாளர்களை அறிமுகம் செய்து வருகிறது. இதில் கடந்த முறை சிவகாசியில் போட்டியிட்ட ராஜேந்திரபாலாஜி இந்த முறை ராஜபாளையத்தில் போட்டியிடுகிறார்.

மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட்ட ராஜன்செல்லப்பா தற்போது திருப்பரங்குன்றத்தின் போட்டியிடுகிறார். முன்னாள் அமைச்சர்கள் பி.வி ரமணா, மாதவரம் மூர்த்தி, கோகுல இந்திரா, வளர்மதி, நத்தம் விசுவநாதன், சின்னையா, சுந்தரம் கேபி முனுசாமி, கே.வி ராமலிங்கம், பரஞ்சோதி, செல்வராஜ் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |