மீனுக்கு இணையான ஒரு குட்டி நீ ஆமை ஒன்று எவ்வித சேதமும் இல்லாமல் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயிரியலாளர் ஒருவர் மீன்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது அவரின் உதவியால் இந்த ஆமை காப்பாற்றப்பட்டது. ஒரு லார்ஜ் மவுத் பாஸ் என்ற மாமிசம் மீன் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளும் போது உயிரியலாளர்கள் மீனின் வயிற்றுப்பகுதியில் ஏதோ ஒன்று விசித்திரமாக இருப்பதை கண்டனர். அப்போது அதன் வயிற்றைத் திறந்து பார்த்தபோது ஒரு சிறிய ஆமை ஒன்று உயிருடன் இருப்பதை கண்டு ஆச்சரியம் அடைந்தனர். இதனையடுத்து அந்த ஆமையின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். ஒரு ஆராய்ச்சிக்காக உயிரியலாளர்கள் ஒருவர் கடலில் மீன்களை பிடிக்க சென்றுள்ளார்.
அப்போது அவர் பிடித்த மீன்களை ஆய்வகத்திற்கு கொண்டு சென்று, ஒரு மீனை மட்டும் ஆய்வகத்தில் வைத்து சோதனையிட்டார். அப்போது அதன் வயிற்றில் ஏதோ ஒன்று அசைவதை அவர் கவனித்துள்ளார். அதனால் மீனின் வயிற்றில் மிக கவனமாக வெட்டினார். அப்போது அதன் வயிற்றில் உயிருடன் நீராக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பொதுவாக மீனின் வயிற்றில் சிக்கிய உயிரிகள் உயிருடன் இருந்தது இல்லை. ஆனால் இந்த குட்டி ஆமை உயிருடன் மீட்கப்பட்டது நெட்டிசன்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் ஆமைக்கு எவ்வித சேதமும் இல்லாமல் அதனை காப்பாற்றிய உயிரியலாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
கடந்த சில ஆண்டுகளாக உணவு மற்றும் தோலுக்காக ஆமைகள் கொள்ளப்படுகின்றன. அவ்வாறு ஆமையில் இருந்து பெறப்படும் எண்ணெய் மூலம் மருந்து பொருட்கள், வாசனை திரவியங்கள் மற்றும் சோப்புகள் ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. அவரின் ரத்தம் மூல நோய்க்கு மருந்தாக பயன்படும். ஆமைகளின் ஓடுகள் அலங்கார பொருட்கள் மற்றும் காலணிகள் செய்ய பயன்படுத்தப்படுகிறது. உலகில் மொத்தம் 225 வகையான கடல் ஆமைகள் வாழ்கின்றன.