தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குழப்பமும், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீடித்து வருகிறது. இதனால் தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது. இந்நிலையில் அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக தனக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் மீது அதிக ஏற்பட்ட அதிருப்தி காரணமாக விலகியது. இதனால் 234 தொகுதியிலும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது. இதையடுத்து தேமுதிகவிற்கு மக்கள் நீதி மையம் கட்சி அழைப்பு விடுத்தது.
ஆனால் தேமுதிக அதை கண்டு கொள்ளாததால் இனி தேமுதிகவிற்கு அழைப்பு விடுக்க மாட்டோம் என்று மக்கள் நீதி மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அமமுக உடன் திரைமறைவில் தேமுதிக கூட்டணி வைக்க ஆலோசித்ததாக தகவல் வெளியானது. இதில் தேமுதிக உடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது உண்மை என்றும் ,எப்போது வேண்டுமானாலும் கூட்டணி உறுதி செய்யப்படலாம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பதே அமமுக மற்றும் தேமுதிகவின் குறிக்கோளாக இருப்பதால் கூட்டணி சேரலாம் என்று கூறப்படுகின்றது.