Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கண்டித்த தந்தை… மகனின் வெறிச்செயல்… கைது செய்த காவல்துறை…!!

குடித்துவிட்டு வராதே என்று கண்டித்த தந்தையை மகன் அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரச்சலூர் கிராமத்தில் வசித்து வந்தவர் சங்கர்-மாலதி தம்பதியினர். இவருக்கு மோகன சங்கர், தீனதயாளன் என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் தீனதயாளன் திருமணத்திற்கு அவரது பெற்றோர் பெண் தேடி வருகின்றனர். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் தந்தை மகனுக்கு இடையில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் சம்பவம் நடந்த அன்று தீனதயாளன் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனை கண்ட அவரது தந்தை ஏன் குடித்துவிட்டு வீண் செலவு செய்கிறாய் என கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தீனதயாளன் சங்கரை கீழே தள்ளிவிட்டு அவர் மார்பு பகுதியில் மிதித்துள்ளார். இதில் சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அவரது குடும்பத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின் பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சங்கரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீனதயாளனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |