திருச்சியில் முக்கிய கிராமங்களில் 7 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருச்சி லால்குடி அன்பில் பகுதியில் திருவிழாவின் போது ஏற்பட்ட மோதலால், 7 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜக்கம்ம ராஜபுரம், கீழன் பில், கோட்டைமேடு, புறா மங்கலம், குறிஞ்சி மற் றும் பருத்தி கால் ஆகிய கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோவில் திருவிழாவின்போது இருவேறு சமூகத்தினருடன் ஏற்பட்ட பிரச்சினையில் கல்வீச்சில் ஈடுபட்ட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அன்பில் ஆட்சி ராம வல்லியம்மன் கோவில் திருவிழா 1994 முதல் நடைபெறாமல் இருந்தது.ஒரு பிரிவை சேர்ந்த மக்கள் வசிக்கும் தெருவில் சாலையில் ஊர்வலமாக கொண்டு செல்ல அனுமதி மறுப்பதால் எந்த பிரச்சனையும் அது நடைபெறாமல் தடைபட்டது. இந்த வருடம் ஏற்கனவே உள்ள நடைமுறை படித் திருவிழா நடத்தலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி திருவிழா நடந்த போது மீண்டும் தங்கள் தெருவுக்கு சாமி ஊர்வலம் வர வேண்டும் என்ற பிரச்சனை செய்ய, உயர்நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி மறுக்க மோதல் ஏற்பட்டது. திருவிழாவின்போது இருவேறு சமூகத்தின் உடனே ஏற்பட்ட இந்த பிரச்சனையால் கல் வீச்சு சம்பவம் நடைபெற்றது. இதனையடுத்து 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.