பிரிட்டன் இளவரசர் ஹரியின் மனைவியை கௌரம்மாவுடன் ஒப்பிட்டு வரலாற்றாளர் கூறிய செய்தி அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
பிரிட்டன் அரச குடும்பத்தின் விக்டோரியா மகாராணியின் ஆட்சியின் போது அவர் ஒரு இந்திய குழந்தையை தத்தெடுத்து வளர்த்துள்ளார். அதாவது இந்தியாவில் குடகுமலை பிரதேசத்தை ஆட்சி செய்த மன்னர் வீரராஜேந்திரன் தனது மகள் கௌரம்மாவை (11 வயது) விக்டோரியா ராணியிடம் தத்துக்கொடுத்துள்ளார். இதனையடுத்து கௌரம்மா வளர்ந்த பின்பு ஆங்கிலேயர் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.
மேலும் கௌரம்மாவின் வாரிசுகள் இன்னும் ஆஸ்திரேலியாவில் வாழ்வதாக கருதப்படுகின்றது. இதனால் பிரிட்டன் அரச குடும்பத்தில் வெள்ளையரல்லாத முதல் பெண் மேகன் அல்ல என்று வரலாற்றாளர் டாக்டர் பிரியா அத்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த செய்தி அனைவரிடமும் வைரலாக பரவி வருகின்றது.