Categories
அரசியல் தேனி மாவட்ட செய்திகள்

கம்பம் சட்ட மன்ற தொகுதியில் இருக்கும் மக்களின் எதிர்பார்ப்புகள்…!!!

தமிழக-கேரள எல்லைப் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் முல்லைப் பெரியாறு அணையின் நீர் பாய்ந்தோடும் தொகுதி கம்பம் ஆகும். இந்த தொகுதி கர்னல் பென்னி குயிக் கட்டிய முல்லைப் பெரியாறு அணையால் தஞ்சைக்கு அடுத்த நெல் களஞ்சியமாக திகழ்கிறது. நெல், கரும்பு, வாழை, தென்னை, பன்னிர் திராட்சை ஆகியவையும் இங்கு விளைவிக்கப்படுகின்றன. ஒரே வளாகத்தில் சிவனுக்கும், பெருமாளுக்கும் கோவில்கள் உள்ள நகரம் கம்பம் ஆகும். தென் காலஹஸ்தி என்று போற்றப்படும் உத்தமபாளையம் காளஹஸ்தீஸ்வரர் கோயில், சின்னமனூர் சிவகாமி அம்மன் கோவில் ஆகியவையும் கம்பம் தொகுதியிலேயே உள்ளன.

இசைஞானி இளையராஜாவின் சொந்த ஊரான பண்ணைபுரம் கிராமம் கம்பம் தொகுதியில் தான் உள்ளது. 1967 முதல் சட்டமன்ற பேரவை தேர்தலை சந்தித்து வரும் கம்பம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக மற்றும் திமுக தலா 4 முறையும், காங்கிரஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலா 2முறையும், மதிமுக 1முறையும் வெற்றி பெற்றுள்ளன. 2016 தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற ஜர்க்கையன்  தற்போது எம்எல்ஏவாக உள்ளார். கம்பம் தொகுதியில் மொத்தம் 27,8,856 வாக்காளர்கள் உள்ளனர்.

முல்லை பெரியாறு அணையில் 152 அடி நீரை தேக்க வேண்டும் என்றும் ஆணை பாதுகாப்பில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்த வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாகும். கம்பம் பகுதியில் நெல் ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என்பதும், திராட்சைக்கு என  குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும் என்பதும் கோரிக்கைகளாக உள்ளன. கம்பம் தொகுதியில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் என்றும் , வேலைவாய்ப்பை பெருக்க தொழிற்சாலைகளை அமைக்கை  வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி அவசர சிகிச்சைப் பிரிவை ஏற்படும் வேண்டும் என்றும் கம்பம் வாக்காளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.   பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், கழிவுநீரை மறுசுழற்சி செய்து விவசாயத்திற்கு பயன்பட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்,  நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் தேர்தலை சந்திக்க காத்திருக்கின்றனர் கம்பம் தொகுதி வாக்காளர்கள்.

Categories

Tech |