Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்… மாணவர் சேர்க்கைக்கு புதிய நடைமுறை… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பிறப்புச் சான்றிதழை வழங்கினால் மட்டுமே பள்ளிகளில் சேர்க்கை வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நெருங்கி கொண்டு இருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.

அதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு சம்மதம் தெரிவித்ததால், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குனர் அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், குழந்தையின் பெயரை பிறப்பு பதிவு செய்த நாளில் இருந்து 12 மாதம் வரை கட்டணமின்றி பதிவு செய்துகொள்ளலாம். கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதிக்கு முன் பெயரின்றி பதிவு செய்யப்பட்ட பிறப்புகள் அனைத்திற்கும், 2024 ஆம் ஆண்டு வரை பெயருடன் பதிவு செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அது தவறும் பட்சத்தில் கால தாமத கட்டணம் செலுத்தி பெயர் பதிவு செய்து பிறப்பு சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். ஒருமுறை பதிவு செய்த பெயரை எக்காரணம் கொண்டும் மாற்ற இயலாது. அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் இதுகுறித்த விழிப்புணர்வை பெற்றோர் அல்லது காப்பாளர் இடம் ஏற்படுத்துவது மிக அவசியம். மேலும் மாணவர் சேர்க்கையின்போது பெயருடன் பிறப்புச் சான்றிதழ் பெறுவது கட்டாயம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |