தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகை கௌதமி ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுவதற்காக திட்டமிட்டு சில மாதங்களாக அந்த பகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் ராஜபாளையம் தொகுதியானது அதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போட்டியிட உள்ளார்.
இதன் காரணமாக ராஜபாளையம் தொகுதி கிடைக்காத வருத்தத்தில் கவுதமி பதிவு செய்த உருக்கமான டுவிட்டர் பதிவில், “ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் உங்கள் வீட்டு மகளாக, சகோதரியாக உங்களில் ஒருவராக என்னை பாவித்து கடந்த 5 மாதங்களாக தங்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு அளித்தீர்கள் என்றும், எனக்கு நீங்கள் காட்டிய உண்மையான அன்புக்கு தலைவணங்கி உங்களுக்கு கட்டுப்பட்டிருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.