Categories
உலக செய்திகள்

எனக்கு இன்சூரன்ஸ் பணம் வேணும்… குடும்பத்தையே கொலை செய்த நபர்… 212 ஆண்டுகள் சிறை தண்டனை…!!!

அமெரிக்காவில் இன்சூரன்ஸ் பணத்திற்காக குடும்பத்தையே ஒரு நபர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில்அலிஎப்எல்மேசாயென் என்பவர் தன் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு 3 மகன்கள் உள்ள நிலையில்,இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இன்சூரன்ஸ் காப்பீடு திட்டத்தில் சுமார் 8கு மேற்பட்ட இன்ஷூரன்ஸ் நிறுவனங்களில் 3 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான விபத்து காப்பீடு திட்டங்களை அவர் எடுத்துள்ளார்.மேலும் அந்த இன்சூரன்ஸ் சந்தா தொகையை தவறாமல் செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் இரண்டு ஆண்டுகளில் பலமுறை இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்குச் சென்று அவர் மனைவி மற்றும் மகன்கள் விபத்தில் உயிரிழந்தால்  எவ்வளவு கிடைக்கும் எப்படி கிடைக்கும் என்று அவர் விசாரித்து உ ள்ளார்.

அப்போது அந்த இன்சூரன்ஸ் காப்பீட்டு நிறுவனங்கள் இன்ஷூரன்ஸ் எடுத்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவேளை விபத்து நடந்தால் விபத்து காப்பீடாக 3 மில்லியன் டாலரையும் கிளைம் செய்து கொள்ளலாம் என்று  கூறியுள்ளது .இதனை எதிர்பார்த்து காத்திருந்த அவர்தக்க சமயத்தில் அதனை பயன்படுத்திக் கொண்டார். ஒரு நாள் அவர் தன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன்லாஞ்ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள துறைமுகத்துக்கு காரில் சென்றுள்ளனர். அப்போது  எதிர்பாராதவிதமாக கார் விபத்துக்குள்ளானது .

அந்த விபத்தில் காருக்குள் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த இரண்டு மகன்களும் நீச்சல் தெரியாமல் நீரிலே மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர் . அவரது மனைவியை அங்கிருந்த மீனவர் ஒருவர் காப்பாற்றியுள்ளார். இதனை அறிந்த அவர் தன் குடும்பத்தாரை காப்பாற்றாமல் தான் மட்டும் பிழைத்தால் போதும் என்று நீரில் நீந்தி அங்கிருந்து தப்பி உள்ளார். அதன் பிறகு எகிப்து நாட்டில் தான் எடுத்த இன்சூரன்ஸ் பணத்தில் ஆடம்பர மாளிகை மற்றும் நிலங்களையும் வாங்கி உள்ளார். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அ ந்த விசாரணையில் விபத்து தற்செயலானது அல்ல என்றும் இது திட்டமிட்ட செயல் என்றும் தெரியவந்துள்ளது .

மேலும் இவர் இன்சூரன்ஸ் பணத்திற்காக தன் குடும்பத்தினை தானே திட்டமிட்டு விபத்தை ஏற்படுத்தி கொலை செய்தார் என்று தெரியவந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இதுபோன்ற கொடூர எண்ணம் உடைய மனிதரை நான் இதுவரை கண்டதில்லை .தண்ணீருக்குள் துடிதுடிக்க  இறந்த அந்த இரு குழந்தைகளின் நிலையை தன்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை என்று மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளார் .  மேலும் அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அந்த நபருக்கு  அதிகபட்ச தண்டனையாக  212 ஆண்டுகள் சிறை தண்டனையை விதித்துதீர்ப்பு .

Categories

Tech |