Categories
தேசிய செய்திகள்

காலில் அடிபட்டதாக…. மம்தா நாடகம் போடுகிறார் – பாஜக விமர்சனம்…!!!

காலில் அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் மம்தா நாடகம் நடத்துகிறார் என பாஜக விமர்சனம் செய்துள்ளது.

தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் நிலையில் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி நந்திகிராமம் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் செய்ய சென்றார். அப்போது 5 பேர் சேர்ந்து அவரை காரை நோக்கித் தள்ளியதில் அவருடைய இடது காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து மம்தா கூறுகையில், இது திட்டமிடப்பட்ட சதி. இந்த சம்பவம் நடந்த இடத்தில் போலீசார் யாரும் இல்லை என்று தெரிவித்துள்ளார். மம்தா மீதான இந்த தாக்குதலுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால் பாஜக இது மம்தா நடத்தும் நாடகம் என்று விமர்சனம் செய்துள்ளது.

Categories

Tech |