தமிழகம் முழுவதும் லாரி வாடகை 30 சதவீதம் உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு கனிமவள டிப்பர் லாரி இயந்திர உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால், மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்பட்டு வந்தன. அதன்பிறகு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் டீசல் விலை உயர்வு காரணமாக பார்சல் லாரி வாடகை 25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் லாரி வாடகை 30 சதவீதம் உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு கனிமவள டிப்பர் லாரி இயந்திர உரிமையாளர்கள் நலச்சங்கம் அறிவித்துள்ளது. தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவதால் தொழிலில் பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே லாரி வாடகை 30 சதவீதம் உயர்த்தப்படுகிறது. மேலும் தமிழகத்தில் தேர்தல் முடிந்த பிறகு மாநில அளவில் அனைத்து சங்கங்களையும் ஒன்றிணைத்து போராட்டம் நடத்தப்படும் எனவும் கூறியுள்ளனர்.