Categories
அரசியல் மாநில செய்திகள்

பண்ருட்டி தொகுதியில்…. உதயசூரியன் சின்னத்தில்…. களமிறங்கும் வேல்முருகன்…!!!

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குழப்பமும், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீடித்து வருகிறது. இதனால் தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது. இதையடுத்து ஒவ்வொரு கட்சியிலும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் பண்ருட்டி தொகுதியில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்  சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே 2001 மற்றும் 2006 தேர்தலில் இதே தொகுதியில் பாமக சார்பாக போட்டியிட்டு எம்எல்ஏ வாக தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |