Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மக்களுக்கு குடுக்குற அரிசிய… இப்படியாடா பண்ணுவீங்க… திண்டுக்கல்லில் அரிசி ஆலை உரிமையாளர் கைது..!!

திண்டுக்கல்லில் ரேஷன் அரிசியை கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த அரிசி ஆலை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள போடி புதூர் தெற்கு தெருவில் பீர்ஒலி என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக அரிசி ஆலை வைத்துள்ளார். இந்நிலையில் அவரது அரசு ஆலையில் ரேஷன் கடை அரிசியை பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் போடி தாலுகா காவல்துறையினர் அவருடைய அரிசி கடைக்கு சென்று சோதனை நடத்தியுள்ளனர்.

அப்போது 400 கிலோ ரேஷன் அரிசியை 6 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ரேஷன் அரசியை அவர் கேரளாவிற்கு கடத்துவதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து 400 கிலோ ரேஷன் அரிசியையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் பீர்ஒலி மீது வழக்குப்பதிந்து பின் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |