Categories
உலக செய்திகள்

இலங்கையர்களை அமெரிக்காவிற்கு கடத்தல் வழக்கு ..!!கனடியர் நபர் மீது குற்றசாட்டு.!! எப்போது தீர்ப்பு ?

டர்க்ஸ் மற்றும் கய்கோஸ் நாடு வழியாக அமெரிக்காவிற்கு 29 ஆவணங்களற்ற  இலங்கையர்களை கடத்த உதவியதாக கனடிய குடிமகன் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் பிறந்த மோகன் ரிச்சி என்று அழைக்கப்படும் 55 வயதான ஸ்ரீ கஜமுகம்  செல்லையா என்ற கனடியர் தனது  சுயலாபத்திற்காக கரீபியன் பகுதி வழியாக  ஆவணங்களற்ற  புலம்பெயர்வோரை அமெரிக்காவிற்கு கடத்த திட்டமிட்டதாக ஒப்புக்கொண்டார். இவர் இலங்கையர்களிடம் 28000 முதல் 65000 வரை கனடிய  டாலர்கள்  கட்டணம் வசூலித்ததாக FBI குற்றம்சாட்டியுள்ளது. இதனையடுத்து செல்லையா பிப்ரவரி 2 4ஆம் தேதி தன் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக அமெரிக்க நிதித்துறை அறிவித்துள்ளது.

புலம்பெயர்ந்தவர்களை செல்லையா முதலில் இலங்கையில் இருந்து துபாய் ,துபாயிலிருந்து மாஸ்கோ, மாஸ்கோவில் இருந்து கியூபா, கியூபாவிலிருந்து ஹெய்தி, ஹெய்திலிருந்து  டர்க்ஸ் மற்றும் கய்கோஸ் பிறகு அங்கிருந்து மியாமி என நீண்ட பயணத்திற்கு பிறகு படகில் செல்லப்பட்டுள்ளனர் . இறுதியில் கனடாவில் கொண்டு வந்து சேர்ப்பது தான் இவருடைய வேலை என்று பெடரல் அதிகாரிகள் தெரிவித்தனர். அந்தப் படகு 40 அடி நீளம் கொண்டது. அந்தப் படகு போலீஸாரிடம் சிக்கிய போது அதில்  106 ஆண்கள் ,17 பெண்கள் மற்றும் 15 வயது பையன் மற்றும் ஒரு 7 வயது சிறுமி இருந்தனர்.

மேலும் 2017 க்கும் 2019 க்கும் இடையில் 6 இலங்கையர்களை அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாக கொண்டு வர திட்டமிட்டதாக செல்லையா  ஒப்புக் கொண்டார். செல்லையா தனது சுயலாபத்திற்காக தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக அட்டார்னி ஜெனரலான நிக்கோலஸ் குற்றம் சாட்டியிருந்தார். தற்போது செல்லையா தன் குற்றங்களை ஒப்புக்கொண்ட நிலையில் அவருடைய வழக்கிற்கான தீர்ப்பு தேதி இன்னும் தெரியாத நிலையில்  தீர்ப்புக்காக காத்திருக்கிறார்.

Categories

Tech |