சிவகங்கை காரைக்குடியில் தேர்தலை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு ஓவிய, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மகரிஷி வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் காரைக்குடி சட்டமன்ற தொகுதி சார்பில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஓவியப் போட்டியும், கட்டுரைப் போட்டியும் நடத்தப்பட்டுள்ளது. இந்த போட்டியில் 70-ற்க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த போட்டிகளில் கலந்து கொண்டவர்களுக்கு ஒவ்வொரு பிரிவிற்கும் ஐந்து பரிசுகள் வீதம் மொத்தம் 20 பரிசுகள் வழங்கப்பட்டது.
அதன்பின் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு காரைக்குடி தாசில்தாரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான அந்தோணிராஜ் வரவேற்றுள்ளார். காரைக்குடி தனித்துணை தாசில்தார் முபாரக் உசேன், காரைக்குடி மண்டல துணை தாசில்தார் மல்லிகார்ஜுன், வருவாய் ஆய்வாளர் மெஹர் அலி மற்றும் சாக்கோட்டை வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டுள்ளனர். வெற்றி பெற்ற பொதுமக்களுக்கும், மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.