ஐபோன் நொருங்கும் அளவுக்கு வெறித்தனமா பயிற்சி இருக்கிற எடுக்கிற ஏபி டிவிலியர்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள தென்னாப்பிரிக்கா வீரரான 360 டிகிரி என்று செல்லமாக அழைக்கப்படுபவர் ஏபி டிவில்லியர்ஸ். இவர் நீண்ட காலமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூர் அணியின் சார்பாக விளையாடி வருகின்றார். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் அதற்கான வலைப் பயிற்சியில் இவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது ஏபி டிவில்லியர்ஸ் அடித்த பந்து அவரது ஐபோனின் மேல் பட்டு போன் உடைந்துள்ளது. இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
https://www.instagram.com/p/CMO07IFggp1/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again