பூட்டப்பட்டிருந்த வீட்டிற்குள் பெண் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் சோகத்தை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்திலுள்ள முதுநகர் பகுதியில் சேகர் என்ற மீனவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி கலா. சேகர் மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் கலாவிடம் பேசுவதற்காக வீட்டிலுள்ள செல்போனுக்கு உறவினர் தொடர்பு கொண்டபோது அதை யாரும் எடுக்கவில்லை. அதனால் அந்த உறவினர் சந்தேகம் அடைந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உள்புறமாக தாழிடப்பட்டிருந்தது. இதனால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அங்கு மர்மமான முறையில் கலா மரணமடைந்து கிடந்துள்ளார்.
இதுகுறித்து உடனடியாக கடலூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.உடனே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய்களுடன் விரைந்து வந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தூக்கு கயிறு அருந்த நிலையில் கிடந்துள்ளது. ஆனால் மோப்ப நாய் அங்கிருந்து எங்கும் செல்லாமல் அதே இடத்திலேயே நின்றுள்ளது. அதன்பின் காவல்துறையினர் கலாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.