நடிகை கீர்த்தி சுரேஷின் சிறுவயது புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் நடிகை கீர்த்தி சுரேஷ் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் . இதையடுத்து இவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரஜினி முருகன் படத்தில் நடித்து பிரபலமடைந்தார். இதைத் தொடர்ந்து இவர் விஜய், தனுஷ், சூர்யா ,விக்ரம் போன்ற டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார் . தற்போது இவர் நடிகர் ரஜினியின் அண்ணாத்த மற்றும் செல்வராகவனின் சாணிக் காயிதம் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் சர்க்காரு வாரி பட்டா , ரங் டே ஆகிய தெலுங்கு படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய அக்காவான ரேவதி சுரேஷிற்கு இன்று பிறந்தநாள் என்பதால் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு சிறு வயதில் அவருடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.