Categories
அரசியல் மாநில செய்திகள்

மற்ற மாநிலங்களில் கம்மி தான்…. தமிழகத்தில் தான் அதிகம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மக்களுக்கு பணம் விநியோகம் செய்வதை தடுக்க பறக்கும் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பணப்பட்டுவாடா அதிகம் செய்யப்படும் 18 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதனால் இந்த தொகுதிகளில் கண்காணிப்பதற்காக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அறிவித்துள்ளது. இதேபோன்று புதுச்சேரியில் 30 தொகுதிகள், மேற்குவங்கத்தில் 40 தொகுதிகளில், அசாம் 52 தொகுதிகளில், கேரளா 25 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதில் தமிழகத்தில் தான் அதிகமாக பணம் பட்டுவாடா வழங்கப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |