Categories
உலக செய்திகள்

நிரூபர்கள் மீது கிருமிநாசினி தெளிப்பு.. தொடர்ந்து சர்ச்சையை கிளப்பும் பிரதமர்.. வெளியான வீடியோ..!!

தாய்லாந்து பிரதமர் பத்திரிக்கையாளர்கள் மீது கிருமி நாசினி ஸ்ப்ரே அடித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தாய்லாந்து பிரதமர் Prayuth Chan-ocha தலைநகர் பாங்காக்கில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டுள்ளார். அப்போது பத்திரிகையாளர் ஒருவர் அமைச்சரவையின்  மறுசீரமைப்பு  எப்பொழுது? என்று கேள்வியை கேட்டுள்ளார். அதற்கு Prayuth, எனக்கு தெரியாது இன்னும் நான் அதை பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் இது தொடர்புடைய தகவல் அறிந்தவர் பிரதமர் மட்டுமே, இனிமேல் இது தொடர்புடைய கேள்விகளை கேட்காதீர்கள் என்று பதிலளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து அங்கிருந்த பத்திரிகையாளர்கள் மீது கிருமிநாசினி ஸ்பிரேயை அடித்திருக்கிறார். அதாவது Prayuth Chan-ocha ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல் ஆவார்.

இவர் கடந்த 2014 ஆம் வருடம் ராணுவ ஆட்சி கவிழ்ப்பிலிருந்து தாய்லாந்தின் பிரதமராக உள்ளார். இந்நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு கிருமிநாசினி அடித்தது சர்ச்சைக்குள்ளானது. மேலும் பத்திரிகையாளரின் காதுகளை பிடித்து இழுப்பது, தலையில் தட்டுவது போன்று பல சர்ச்சைக்குரிய செயல்களை செய்திருக்கிறார்.

Categories

Tech |