தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குழப்பமும், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீடித்து வருகிறது. இதனால் தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது. இதையடுத்து ஒவ்வொரு கட்சியிலும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றது.
அதன்படி மதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. சாத்தூர்- வைகோ மகன் துரை வையாபுரி அல்லது டாக்டர் ஏ.ஆர் ரகுமான், வாசுதேவநல்லூர்- திருமலை குமார், மதுரை தெற்கு- புதூர் பூமிநாதன், பல்லடம்- மோகன்குமார் அல்லது ஈஸ்வரன், அரியலூர்- சின்னப்பா, மதுராந்தகம்- மல்லை சத்யா.