Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மகளிர் சுய உதவி குழு… வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்… மாவட்ட ஆட்சியர் தலைமை..!!

பெரம்பலூரில் மகளிர் சுய உதவி குழுவினர் 100% வாக்கை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் மேற்கொண்டனர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன்படி பெரம்பலூரில் மகளிர் சுய உதவிக்குழுவினர் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். இந்த ஊர்வலம் பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகிலிருந்து புறப்பட்டது. ஊர்வலம் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஸ்ரீ வெங்கட பிரியா, துணை மாவட்ட ஆட்சியர் பத்மஜா முன்னிலையில் கொடி அசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த ஊர்வலத்தில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மகளிர்கள் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி விழிப்புணர்வு மேற்கொண்டனர். ஊர்வலம் ரோவர் வளைவு, வெங்கடேசபுரம், காமராசர் வளைவு, சங்கு பேட்டை வழியாக சென்று பெரம்பலூர் தாசில்தார் அலுவலகத்தின் முன்பு முடிவடைந்துள்ளது.

Categories

Tech |