Categories
உலக செய்திகள்

மாஸ்க் போடுங்கனு சொன்னதுக்கு…! அட்ராசிட்டி செய்த பெண்கள்…. அமெரிக்காவில் தலைதூக்கும் இனவெறி தாக்குதல்.!!

அமெரிக்காவில் கார் ஓட்டுனர் மாஸ்க் அணிய சொன்னதால் இளம்பெண்கள் இனரீதியாக தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேபாளத்தை சேர்ந்தவர் சுதாகர் கட்கா. இவர் பிழைப்பிற்காக அமெரிக்காவில் கார் ஓட்டுனராக பணியாற்றி வருகின்றார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று 3 இளம்பெண்களை தன் காரில் ஏற்றிக் கொண்ட சுபாகர், அந்த மூன்று பெண்களில் ஒருவர் மாஸ்க் அணியாததால் மாஸ்க் அணியுமாறு கேட்டுக் கொண்டதோடு அவரிடம் மாஸ்க் இல்லை என்றால் பெட்ரோல் நிலையத்தில் நிறுத்தி மாஸ்க் வாங்கி கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். இதை கேட்ட அந்த மூன்று இளம் பெண்களும் சுபாகரை கெட்ட வார்த்தைகளால் திட்டியதோடு மட்டுமல்லாமல் சுபாகரிடம் மோசமாகவும் நடந்து கொண்டுள்ளனர்.

அதில் ஒரு பெண் சுதாகரின் அருகில் வந்து வேண்டுமென்றே இரும்புவதையும், அதிக சத்தம் போட்டுக்கொண்டு அவரின் மொபைலை பிடுங்குவதும் மற்றும் அவர் அணிந்திருந்த மாஸ்கைப் பித்து எரிந்தும். மற்றொரு பெண் கண் எரிச்சலை உண்டாக்கும் பெப்பர் ஸ்பிரே காருக்குள் அடித்த வீடியோ காட்சி சுதாகரின் காரில் இருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. அமெரிக்காவில் பிறந்ததால் நீங்கள் உயர்ந்தவர்கள் இல்லை நீங்களும் எல்லோரைப் போன்றும் சக மனிதர்கள்தான் இப்படி ஆக்ரோஷத்துடன் நடந்து கொண்ட நீங்கள் மனிதர்களே அல்ல மிருகங்களே என்று சுதாகர் கூறியுள்ளார். இது முற்றிலும் இனரீதியான தாக்குதல் என்றும் கூறினார். இதுகுறித்து தற்போது போலீசார் விசாரணை துவங்கியுள்ளனர்.

Categories

Tech |