Categories
மாநில செய்திகள்

அரசியலில் கால் பதித்த நாள் முதல்… இன்று வரை… ஓ பன்னீர் செல்வத்தின் அரசியல் பயணம்… இதோ..!!

ஓ பன்னீர்செல்வம் அரசியலில் கால் பதித்த நாள் முதல் தற்போது வரை கடந்து வந்த பாதையை பற்றி இதில் தெரிந்து கொள்வோம்.

ஜனவரி 14, 1951 ஆண்டு  ஓ.பன்னீர்செல்வம் பிறந்தார். இவர் அதிமுகவைச் சேர்ந்த தமிழக அரசியல்வாதி ஆவார்.  இவர் ஓ.பி.எஸ் என்று அனைவராலும் அறியப்படுகிறார். தற்போது இவர் தமிழகத்தின் துணை முதல்வர் ஆவார்.

வெற்றி:

2001 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  • வருவாய்த்துறை அமைச்சர் (மே 19, 2001 – செப்டம்பர் 1, 2001)
  • தமிழக முதல்வர் (செப்டம்பர் 21, 2001 – மார்ச் 1, 2002)
  • பொதுப்பணித்துறை அமைச்சர் (மார்ச் 2, 2002 – டிசம்பர் 2006) போன்ற பொறுப்புகளைப் பெற்றுப் பணியாற்றினார்.

2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், தேனி மாவட்டம், பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2011, 2016 இல் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி  சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த காலகட்டத்தில் நிதி அமைச்சராக பணியாற்றினார்.

வருகிற சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது.  துணை முதல்வர் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

தமிழக முதல்வராக மூன்று முறை: 

  • முதல் முறை: 2001 செப்டம்பர் 21 முதல் 2002 மார்ச் 1 ஆம் தேதி வரை.
  • இரண்டாம் முறை: 27 செப்டம்பர் 2014  முதல்  22.05.2015 வரை .
  • மூன்றாம் முறை:  5 டிசம்பர் 2016 முதல் 5 பிப்ரவரி 2017  வரை .

முதலமைச்சராக பதவி வகித்துள்ளார்.

துணை முதல்வர்

அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி அணியும் ஓ பன்னீர் செல்வம் அணியும் 2017 ஆகஸ்ட் 21 இல் இணைந்ததை அடுத்து ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி ஓ பன்னீர்செல்வம் துணை முதல்வரானார்.

வகித்த பதவிகள்:

சட்டமன்ற உறுப்பினர் : 2001 – இன்று வரை

வருவாய்த்துறை அமைச்சர், தமிழ்நாடு:  13 டிசம்பர் 2002 – 12 மே 2006

பொதுப்பணித்துறை அமைச்சர், தமிழ்நாடு: 2 மார்ச் 2002 – 12 டிசம்பர் 2002

வருவாய்த்துறை அமைச்சர், தமிழ்நாடு:  19 மே 2002 – 1 செப்டம்பர் 2001

நகர்மன்றத் தலைவர் – பெரியகுளம் நகராட்சி: 1996–2001

 

Categories

Tech |