முதன்முதலில் பிரான்ஸ் நாட்டில் விண்வெளியில் ராணுவ பயிற்சி தொடங்கி உள்ளது .
பிரான்ஸில் முதல்முறையாக விண்வெளியில் ராணுவ பயிற்சியை துவக்கி உள்ளது. இதனால் சேட்டிலைட்டுகளில் ஏற்படும் பிரச்சனைகளை எதிர்கொள்ள விண்வெளி ராணுவ பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. இந்த ராணுவ பயிற்சிக்கு முதல் பிரெஞ்சு சேட்டிலைட்டின் நினைவாக ‘அஸ்டெர் க்ஸ்’ பெயரிடப்பட்டது. இந்த இராணுவ பயிற்சி ,திங்கள் அன்று தொடங்கி வெள்ளிக்கிழமை வரை நடைபெறும். இந்த பயிற்சிக்கு அமெரிக்கா மற்றும் ஜெர்மனி நாட்டை சேர்ந்த விண்வெளி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.
2019ஆம் ஆண்டு நமது சேட்டிலைட்டுகளை பாதுகாக்க இராணுவ மயமாக்குவது அவசியம் என்று பாதுகாப்புத்துறை அமைச்சரான ஃப்ளோரன்ஸ் பார்லி தெரிவித்தார். இதற்கு முன் 2017 ஆம் ஆண்டு ரஷ்யா ,பிரான்ஸ்- இத்தாலி சேட்டிலைட்டுகளை உளவு பார்க்க முயற்சித்ததாக பிரான்ஸ் குறிப்பிட்டுள்ளது. இதனால் பிரான்ஸ் இந்த வாரம் எடுத்துள்ள இந்தப் புதிய ராணுவ பயிற்சியானது பிரான்சை உலக அளவில் 3 வது பெரிய விண்வெளி தலமாக அமைக்க அந்நாட்டின் அரசாங்கம் முயற்சித்து வருகிறது .