Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

1 இல்ல…. 2 இல்ல…. 10 முறை கொடுத்தும் பண்ணல…. யாரும் ஒட்டு கேட்டு வராதீங்க…. வைக்கப்பட்ட போஸ்டர்…!!!

யாரும் எங்கள் பகுதிக்கு ஓட்டுக்கேட்டு வரக்கூடாது என்று புதுக்கோட்டை மாவட்ட பகுதியை  சேர்ந்த மக்கள் பேனர் வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் அரசியல் கட்சியினர் ஒவ்வொரு பகுதியாக சென்று வாக்கு சேகரிக்கவும் ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள ஆவுடையார் கோவில் ஒன்றியம் தாழானூர் ஊராட்சியில் பரிவீரமங்கலம், ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் இறந்தவர்களை அடக்கம் செய்யும் மயானத்திற்கு செல்வதற்கு சாலை இல்லை என்பதால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளனர்.

மேலும் மழை காலங்களில் அதிகமாக சிரமப்பட்டு வந்துள்ளனர். எனவே அவர்களுடைய பகுதிக்கு மயானத்திற்கு செல்லும் வழியில் சாலை வசதி ஏற்படுத்திக் கொடுக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு 3 முறையும், முதலமைச்சருக்கு 2 முறையும், ஆதிதிராவிட அமைச்சருக்கு 2 முறையும், ஊராட்சி ஒன்றிய ஆணையருக்கு 10 முறையும் மனு கொடுத்துள்ளனர். ஆனால் யாரும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறுகின்றனர். இதன் காரணமாக தற்போது அந்தப் பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் தேர்தலை புறக்கணிக்க உள்ளதாகவும், அதனால் இப்பகுதிக்கு யாரும் ஓட்டு கேட்டு வரக்கூடாது என்றும் பேனர் வைத்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |