கேரளாவைச் சேர்ந்த வாலிபர்கள் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மத்திய பேருந்து நிலையத்தில் இருக்கும் ஒரு பல கடைக்கு இரண்டு வாலிபர்கள் வந்து பழங்களை வாங்கி விட்டு பணத்தை கொடுத்து உள்ளனர். அந்தப் பணத்தின் மீது கடைக்காரருக்கு திடீரென சந்தேகம் வந்ததால் உடனடியாக இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து விட்டார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த வாலிபர்களை பிடிக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது அவர்கள் இருவரும் காவல்துறையினரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்துள்ளனர்.
ஆனால் காவல்துறையினர் அவர்களில் ஒரு வாலிபரை பிடித்து விசாரித்ததில் அவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த முகமது ஜூனைத் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த வாலிபரிடம் சோதனை செய்ததில், அவரிடம் 500 ரூபாய் நோட்டுகள் 17 எண்ணம் இருந்ததும் அதில் இரண்டு கள்ள நோட்டுகள் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த வாலிபரை கைது செய்து அவரிடம் இருந்த ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்து விட்டனர். அதோடு தப்பியோடிய மற்றொருவரான பாஸில் என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.