கீதா ஜீவன் தூத்துக்குடி மாவட்டத்தின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். இவர் தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளரும் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என்.பெரியசாமி மகள் ஆவார். இவர் இதற்கு முன்பாக 1996 முதல் 2001 வரை உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டு பணியாற்றியுள்ளார். 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் களம் தூத்துக்குடி தொகுதியில் இறக்கப்பட்டார்.
தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளரை வீழ்த்தி முதன்முறையாக சட்டமன்றத்திற்கு சென்றார். இவருக்கு அப்போது சமூக நலத்துறை அமைச்சராக பதவி வழங்கப்பட்டது. அதன்பிறகு 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தோல்வி கண்ட இவர் 2016ஆம் வருடம் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு மீண்டும் சென்றார். கீதாஜீவன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கிராமப்புற சாலைகளின் தரத்தை உயர்த்திக் கொடுத்து தார் சாலையாக மாற்றி கொடுத்துள்ளார்.
மேலும் கிராமப்புற பகுதிகளில் நிலவி வரும் தண்ணீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் குடிநீர் தொட்டிகளை அமைத்து கொடுத்துள்ளார். தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட படுகைகள் வழங்கியுள்ளார். பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்களையும் சுற்றுச் சுவர்களையும் அமைத்துக் கொடுத்துள்ளதுள்ளார். மருத்துவமனைக்கு தேவையான பொருளுதவியையும் வழங்கியுள்ளார். தூத்துக்குடி உட்பட அருகருகே உள்ள 3 தொகுதியில் நிச்சயமாக திமுக- வை வெற்றி பெற வைப்போம் என உறுதிப்பட தெரிவித்துள்ளார்.