நாம் உணவு உண்ணும் நேரங்களில் இவ்வாறு செய்தால் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் அல்சைமர் பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
நம் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் உண்ணும் உணவில் சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். அது நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அவ்வாறு நாம் உணவு உண்ணும் போது டிவி பார்த்துக் கொண்டும், கேம் விளையாடிக் கொண்டும், பேசிக் கொண்டும் சாப்பிடுவது வழக்கம்.
ஆனால் இதுபற்றி ஜெர்னல் ஆஃப் நியூட்ரிஷன் வெளியிட்ட ஆய்வு அறிக்கையின்படி, உணவு உண்ணும் நேரங்களில் டிவி பார்ப்பது, கேம் விளையாடுவது ஆகிய பழக்கம் உள்ளவர்கள் குறைந்த அளவே உண்ணுகின்றனர். எனவே இவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு, அல்சைமர், கவனக்குறைவு போன்ற பிரச்சனைகள் வருகிறது. அதனால் உணவு உண்ணும்போது இதர வேலைகள் செய்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.