Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அப்போ இது எல்லாமே போலியா…? அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்…. கைது செய்யப்பட்ட பிரபல தொழிலதிபர்…!!

போலி ரசீது தயாரித்து மோசடி செய்த குற்றத்திற்காக தொழிலதிபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஜி.எஸ்.டி இயக்குனர் ஜெனரல் புலனாய்வு அதிகாரிகளுக்கு சேலம், பொள்ளாச்சி, கரூர் போன்ற நகரங்களில் பதிவு செய்யப்பட்ட பிளைவுட், செராமிக் பொருட்கள் தயாரிக்கும் ஒரு தனியார் நிறுவனம் போலி ரசீதுகளை தயார் செய்து மோசடியில் ஈடுபடுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி ஜி.எஸ்.டி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அந்த நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது 318 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை சப்ளை செய்ததாக கூறி 40 கோடி ரூபாய் உள்ளிட்டு வரியை அரசிடமிருந்து பெற்றிருந்தது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் சப்ளை செய்த பொருட்கள் குறித்த விவரங்கள் மற்றும் அதற்கான ரசீதுகளை சோதனை செய்தபோது அவை அனைத்தும் போலியானவை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். எனவே ஜி.எஸ்.டி அதிகாரிகள் கரூரைச் சேர்ந்த தொழிலதிபரை கைது செய்து பின் அவரை சிறையில் அடைத்து விட்டனர்.

Categories

Tech |