அமைச்சர் ஜெயக்குமாரின் அரசியல் வாழ்க்கையை பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.
து. ஜெயக்குமார்(D. Jayakumar) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இராயபுரம் தொகுதியிலிருந்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு முன்னதாக இதே தொகுதியிலிருந்து, 1991, 2001, 2006, மற்றும் 2011 தேர்தல்களில் வெற்றி பெற்றார்.
முந்தைய ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சராகப் பணியாற்றி உள்ள இவர் செப்டம்பர் 29, 2012 வரை தமிழகச் சட்டப்பேரவைத் தலைவராக செயல்பட்டார். செப்டம்பர் 29, 2012 அன்று பேரவை தலைவர் பதவியில் இருந்து விலகிக்கொள்வதாக தெரிவித்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை அறிவியலும், சென்னை சட்டக்கல்லூரியில் 1987இல் சட்டப்படிப்பும் முடித்தார்.
ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார் செய்த நல திட்டங்கள்:
ராயபுரம் தொகுதியை பொறுத்த வரைக்கும் மீனவர்கள்தான் அதிகமாக உள்ளனர். இந்த தொகுதியில் மீன் பிடித்தல், மீன் விற்பனை உட்பட பல தொழில்கள் அதிகமாக நடந்து வருகின்றது. சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காசிமேடு மீன்பிடி துறைமுக ஒருங்கிணைந்த மீன் விற்பனை கூடம் ஒன்றை அமைத்துக் கொடுத்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இந்த விற்பனைக் கூடம் 6 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டது. இதை தற்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை 2020 வருஷம் செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி திறந்து வைத்தார்.
அதுமட்டுமல்லாமல் மீன் விற்பவர்கள் சுட்டெரிக்கும் வெயிலில் உட்கார்ந்து விற்பனை செய்யாமல் இருப்பதற்காக அவங்களுக்கு கூடாரங்கள் அமைத்துக் கொடுத்துள்ளார். அமைச்சர் ஜெயக்குமார் தமிழ்நாடு மீன்வளத்துறை சார்பில் தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்ட நிதியிலிருந்து சுகாதார வளாகம் அமைத்துள்ளார். மேலும் ராயபுரத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலமாக குடிசை பகுதிகளை நீக்கிவிட்டு அந்த பகுதியில் பொதுமக்களுக்கான குடியிருப்புகளை கட்டி கொடுத்துள்ளார்.
மேலும் தொகுதி மக்கள் நலனுக்காக தொகுதி முழுவதும் பத்துக்கும் மேற்பட்ட புதிய ரேஷன் கடைகளை அமைத்துக் கொடுத்திருக்கிறார். இதை தவிர தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் இருந்த பெருநகர சென்னை நடுநிலை பள்ளி கூடத்தில் மாணவர்கள் உட்கார்ந்து சாப்பிட டைனிங் டேபிள், ஆடிட்டோரியம் போன்றவற்றையும் அமைத்துக் கொடுத்துள்ளார்.