Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? முதியவர் எடுத்த விபரீத முடிவு…. கிருஷ்ணகிரியில் சோகம்…!!

முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள லக்கம்பட்டி பகுதியில் மாரியப்பன் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் திடீரென தனது வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து ஊத்தங்கரை காவல்துறையினருக்கு அருகில் இருந்தவர்கள் தகவல் தெரிவித்து விட்டனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் முதியவரின் உடலை விட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாரியப்பன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |