மனைவி பிரிந்து சென்றதால் ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் மாரிமுத்து என்ற லோடு ஆட்டோ டிரைவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜோதிலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு பத்து மாத ஆண் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக ஜோதிலட்சுமி தனது குழந்தையுடன் பெற்றோர் வீட்டிற்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக சென்றுவிட்டார். இதனையடுத்து ஜோதி லட்சுமியுடன் சேர்ந்து வாழ விரும்பிய மாரிமுத்து அவரை வீட்டிற்கு வருமாறு பலமுறை அழைத்துள்ளார்.
ஆனால் அதற்கு ஜோதிலட்சுமி மறுப்பு தெரிவித்ததால் மன உளைச்சலில் இருந்த மாரிமுத்து தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த கோவில்பட்டி மேற்கு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவரின் உடலை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.