குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற பெண்ணுக்கு கணவர் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ராஜ்குமார் என்பவர் தனது மனைவி , மூன்று பெண் பிள்ளைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் குடும்பச் சூழல் காரணமாக ராஜ்குமாரின் மனைவி கணவனின் வருமானம் குழந்தைகளின் கல்வி செலவுகளுக்கு போதாததால் தான் வெளிநாட்டிற்கு வேலைக்கு போவதாக கணவரிடம் கூறினார். இதனைக்கேட்ட ராஜ்குமார் தனது குடும்ப சூழ்நிலையை எண்ணி மனைவியை குவைத் நாட்டிற்கு அனுப்பி வைத்தார்.
அங்கிருந்து அவர் மனைவி ஒவ்வொரு மாதமும் ராஜ்குமார் பெயரில் தனது சம்பளத்தை அனுப்பியுள்ளார். இதனால் அவர்களின் குடும்ப சுமை குறைந்தது. அது குழந்தைகளின் கல்விக்கும் பெரிதாக உதவியது. இந்நிலையில் ராஜ்குமாருக்கு அதே ஊரை சேர்ந்த சுகுணா மாரி என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதால் அவருடன் சேர்ந்து வாழ போவதாக கூறியுள்ளார். இந்நிலையில் சுகுணாமாரி தனது கணவன் மற்றும் பிள்ளைகளை விட்டு விட்டு திடீரென காணாமல் போனார்.
அதேபோல் ராஜ்குமாரும் தனது பெண் குழந்தைகளை தவிக்கவிட்டு காணாமல் போனார். சுகுணா மாரியின் தற்போதைய நடவடிக்கையை கவனித்த கணவர் அவர் ராஜ்குமாருடன் சென்றுவிட்டார் என காவல்துறையிடம் புகார் தெரிவித்தார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இருவரும் ஒன்றாக சென்றார்களா, இல்லை தனித்தனியாக சென்றார்களா என்ன விசாரித்து வருகின்றனர்.