Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து கேட்ட கேள்விகள்…. திணறிய தொழிலதிபர்….. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

பனியன் நிறுவன உரிமையாளர் உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற 2 லட்சத்து 32 ஆயிரத்து 600 ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து விட்டனர்.

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பறக்கும் படையினர் பொதுமக்களுக்கு பரிசுப்பொருள் மற்றும் பணத்தை கொடுப்பதை தடுக்கும் பொருட்டு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் திருப்பூர் வஞ்சிபாளையம் பகுதியில் வணிக வரித்துறை அலுவலர் முத்து தலைமையிலான நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி அவர்கள் சோதனை செய்ததில் இரண்டு லட்சத்து 32 ஆயிரத்து 600 ரூபாய் பணம் அதில் இருந்ததை கண்டு பிடித்துள்ளனர். இதனையடுத்து அந்த பணத்திற்கான உரிய ஆவணத்தை காரை ஓட்டி சென்ற திருப்பூரில் பனியன் நிறுவனம் நடத்தி வரும் பிரபு என்பவரிடம் அதிகாரிகள் கேட்டபோது அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லை. எனவே அந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் உரிய ஆவணம் கொடுத்த பிறகு பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |