Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எப்போவுமே இதே தொல்லை தான்…. விரக்தியில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. தவிப்பில் வாடும் குழந்தைகள்…!!

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள மாதவரம் பாரதியார் தெருவில் மோகன் என்ற கட்டிட தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் இருக்கின்றது. இந்நிலையில் மோகன் அடிக்கடி மது குடித்துவிட்டு தனது மனைவியுடன் சண்டை போட்டுள்ளார். இதனையடுத்து மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்ட போது மன உளைச்சலில் இருந்த ஈஸ்வரி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த மாதவரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஈஸ்வரியின் உடலை மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |