விபத்தில் ஆடு வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பாசுரெட்டிகண்டிகை கிராமத்தில் சுபன் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆடு வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சுபன் லட்சுமபுரம் ஆற்று மேம்பாலம் மீது தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சுபன் படுகாயம் அடைந்தார்.
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். அதன் பின் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவருக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த கனகம்மாசத்திரம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.