Categories
அரசியல் தேசிய செய்திகள்

சர்க்கர நாற்காலியில் அமர்ந்தாவது பரப்புரை… மம்தா பானர்ஜி வெளியிட்ட வீடியோ…!!!

மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள வீடியோவில் சக்கர நாற்காலியில் அமர்ந்தாவது பரப்புரை செய்வேன் என தெரிவித்துள்ளார்.

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படுவதற்கான தேதி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது. அதிலும் சில கட்சிகள் தொகுதி பங்கீடு பற்றிய தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்கள். தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதனால் மாநிலம் முழுவதிலும் தீவிர கண்காணிப்பு பணி நடந்துவருகின்றது.

இந்நிலையில் மம்தா பானர்ஜி மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டதால் பெரும் பதற்றம் நிலவியது. நந்திகிராம் தொகுதியில் தேர்தல் பரப்புரைக்கு சென்றபோது மம்தா பானர்ஜியை மர்ம நபர்கள் தள்ளிவிட்டதால் காலில் காயம் ஏற்பட்டது. அதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், சில நாட்களில் நான் பிரசாரத்தில் ஈடுபடுவேன். சக்கர நாற்காலியில் அமர்ந்தாவது பரப்புரை செய்வேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும். காரை நோக்கிச் செல்லும் போது சிலர் தன்னை தள்ளிவிட்டதால் காலில் காயம் ஏற்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

Categories

Tech |