Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இருமலிலிருந்து முற்றிலும் விடுபட செய்து… ஜீரண சக்தியை அதிகரிக்க செய்ய உதவும்… ருசியான இந்த ரசத்தை சாதத்துக்கு ஏற்ற… சுவையான சைடிஸ்..!!

கற்பூரவள்ளி இலை          – 5
சுக்கு                                         – ஒரு சிறிய துண்டு
மிளகு                                       – அரை டீஸ்பூன்
கடுகு                                        – சிறிதளவு
சீரகம்                                       –  சிறிதளவு
துவரம்பருப்பு                      – 2 டீஸ்பூன்
தக்காளி சாறு                      – 2 கப்
நெய்                                         – சிறிதளவு
எண்ணெய்                            – சிறிதளவு
உப்பு                                          – தேவையான அளவு.

செய்முறை:

முதலில் கற்பூரவள்ளி இலையை எடுத்து  நன்கு  சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி எடுத்து  கொள்ளவும்.

பின்பு, வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி  காய்ந்ததும் கற்பூரவள்ளி இலை, சுக்கு, துவரம்பருப்பு, மிளகு ஆகியவற்றை லேசாக வதக்கி எடுத்து, மிக்சிஜாரில் போட்டு விழுதாக  அரைத்து எடுத்து கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து அதில் அரைத்த விழுதுகள், தக்காளி சாறு, தேவையான அளவு  தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து 5 நிமிடம் நன்கு கொதிக்க வைக்கவும்.

மற்றொரு கடாயை, அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம் போட்டு தாளித்து கொதிக்கும் கலவையில் சேர்த்தால், ருசியான  கற்பூரவள்ளி சுக்கு ரசம் தயார்.

Categories

Tech |