காஞ்சிபுரத்தில் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த பணத்தினை திருப்பி ஒப்படைக்க சிறப்புக்குழு நியமிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 2021 காண சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் பணப்பட்டுவாடா போன்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க தேர்தல் குழு அனைத்து மாவட்டங்களிலும் பறக்கும் படையினரை நியமித்துள்ளார்கள். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரத்தில் பறக்கும் படையினர் 24 மணி நேரமும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்படும் பணத்தினை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இவ்வாறு பறிமுதல் செய்த தொகையை திருப்பி ஒப்படைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி சிறப்பு குழு நியமிக்கப் பட்டிருக்கிறார்கள். அதாவது பறக்கும் படையினர் பறிமுதல் செய்த பணத்திற்கான உரிய ஆவணத்தை , பொதுமக்கள் இக்குழுவிடம் சமர்ப்பித்தால் பணம் திருப்பி ஒப்படைக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் செய்தியாளர்களிடம் அறிக்கை விடுத்துள்ளார். மேலும் இக்குழுவின் ஒருங்கிணைப்பாளர்களை 9443395125 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.