Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் “துணை மின்நிலையங்களில் தீ விபத்து” மின் விநியோகம் நிறுத்தம்..!!

அமெரிக்காவில், இரு துணை மின்நிலையங்களில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் உடனடியாக மின்விநியோகம் நிறுத்தப்பட்டது.

அமெரிக்க நாட்டில் உள்ள விஸ்கான்சின் மாகாணத்தின் மாடிசான் நகரில் இரண்டு துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த இரு துணை மின் நிலையங்களிலும் நேற்று யாரும் எதிர்பார்க்காத நிலையில் திடீரென பயங்கரமாக தீப்பற்றி எறிந்தது. இதனால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அச்சமடைந்தனர்.

Image result for Two sub-power plants located in Madison, Wisconsin, United States, were on fire yesterday.

உடனே பெரிய அசம்பாவிதம் ஏதும் நடக்காத வகையில், முன்னெச்சரிக்கையாக அந்த பகுதிகளில் மின் விநியோகத்தை மின் ஊழியர்கள் நிறுத்தினர். இதையடுத்து தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இரு துணை மின் நிலையங்களிலும் இயந்திர கோளாறு காரணமாக தீ பற்றியதாகவும், கோளாறு சரியானதும் பின்னர் மீண்டும் மின்விநியோகம் தொடங்கப்படும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |