தூத்துக்குடி மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரம் கோவில்பட்டி தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். கோவில்பட்டியில் கடலை மிட்டாய், விவசாயம், கால்நடை வளர்ப்பு, தீப்பெட்டி உற்பத்தி முக்கியத் தொழில்களாக உள்ளன. கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 7 முறை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் மூன்று முறையும், சுயேட்சை வேட்பாளர் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளனர். மேலும் அதிமுக நான்கு முறை வெற்றி பெற்றுள்ளது. தற்போதைய சட்டமன்ற அமைச்சராக அமைச்சர் கடம்பூர் ராஜு இருக்கிறார்.
கோவில்பட்டி தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 64 ஆயிரத்து 900 இருக்கிறார்கள். கோவில்பட்டியில் தற்போதைய எம்எல்ஏவாக கடம்பூர் ராஜு இருக்கிறார். இவர் ஒரு தமிழக அரசியல்வாதியாவார். தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகே உள்ள சிதம்பரத்தில் பிறந்த இவர் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றார். ஆசிரியர் வேலையை விட்டு விலகி அதிமுகவில் சேர்ந்தார். பின்னர் 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதையடுத்து மீண்டும் 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வென்று தமிழக அமைச்சரவையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 7 கோடி செலவில் உலகத்தரம் வாய்ந்த ஹாக்கி மைதானம், அரசு கலை அறிவியியல் கல்லூரி, இரண்டாவது குடிநீர் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.