நடிகை ஹரிஜாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யூடியூப்பில் ‘எருமை சாணி’ என்ற தனியார் சேனல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் ஹரிஜா. இவர் ஒவ்வொரு வீடியோவின் இறுதியிலும் ‘போடா எரும சாணி’ என திட்டுவது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனால் இவருக்கு தனி ரசிகர்கள் உருவாக்கினர். இதன் மூலம் பிரபலமடைந்த ஹரிஜாவுக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது இவர் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ என்ற படத்தில் நடித்துள்ளார்.
மேலும் நடிகை ஹரிஜா கடந்த வருடம் அமர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் நடிகை ஹரிஜா கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அவர் தனக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.