அசுரன் பட தெலுங்கு ரீமேக்கில் இளவயது கெட்டப்பில் வெங்கடேஷ் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் அசுரன். தற்போது இந்த திரைப்படம் தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் நடிகர் வெங்கடேஷ் நடிப்பில் ரீமேக் ஆகி வருகிறது. இந்தப் படத்தை தமிழில் அசுரன் படத்தை தயாரித்த கலைப்புலி எஸ் தாணு தயாரித்து வருகிறார் . சமீபத்தில் இந்த படத்தில் வயதான தோற்றத்தில் வெங்கடேஷ் நடிக்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் அசுரன் படத்தில் தனுஷ் நடித்த இளவயது கெட்டப்பில் நடிகர் வெங்கடேஷ் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் வெங்கடேஷ் இளமைத் தோற்றத்தில் இல்லை என்றும் இவருக்கு பதில் ஏதேனும் ஒரு இளம் நடிகரை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கலாம் என்றும் பேச்சுக்கள் எழுந்துள்ளது. ஆனால் இதைப் பற்றி கவலைப்படாத வெங்கடேஷ் கண்டிப்பாக நாரப்பா படத்தை பிளாக்பஸ்டர் படம் ஆக்குவேன் என நம்பிக்கையுடன் கூறி வருகிறாராம்.