Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இது செமயா இருக்கே… பழைய கிழிந்த நோட்டுகள் மாற்றம்… மெர்க்கெண்டைல் வங்கி கிளை முகாம்..!!

சிவகங்கை காரைக்குடியில் மெர்க்கண்டைல் வங்கி கிளையில் கிழிந்த பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றும் முகாம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி கிளை உள்ளது. அந்த வங்கிக் கிளையில் கிழிந்த பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றும் முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த வங்கி ரிசர்வ் வங்கியின் பரிந்துரைப்படி பழைய மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றும் முகாம் நடைபெற்றது.

இந்த முகாம் நேற்று காலை 10 மணி அளவில் தொடங்கி மாலை 4 மணி வரை நடந்தது. இதில் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் திரளாக கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து பழைய மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுகளை கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை வாங்கிக் கொண்டு சென்றனர்.

Categories

Tech |