Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இவ்ளோ ஏலக்காயா… எப்டி வந்துச்சு..? கடலோர காவல் துறையினர் விசாரணை..!!

நாகையில் இரண்டாவது நாளாக கரை ஒதுங்கிய 3 ஏலக்காய் மூட்டைகளை காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு அருகே கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், கோடியக்காடு, வாணவன்மகாதேவி ஆகிய பல மீனவ கிராமங்கள் உள்ளன. வேதாரண்யம் கடற்பகுதி வழியாக மஞ்சள் மற்றும் கஞ்சா மூட்டைகள் இலங்கைக்கு கடத்தப்படுவதை காவல்துறையினர் அடிக்கடி பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் சென்ற திங்கட்கிழமை அன்று முனங்காடு கடற்கரை பகுதியில் 25 கிலோ ஏலக்காய் கொண்ட இரண்டு மூட்டைகள் கரை ஒதுங்கி கிடந்துள்ளது. அதன் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த ஏலக்காய் மூடைகள் எப்படி கரை ஒதுங்கியது ? என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அதே முனங்காடு கடற்கரையில் பகுதியில் இரண்டாவது நாளாக 65 கிலோ எடை கொண்ட ரூ.2.5 மதிப்புள்ள ஏலக்காய் கரையொதுங்கி கிடந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்து வந்த தமிழக கடலோர காவல் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், துணை சூப்பிரண்டு குமார் மற்றும் காவல்துறையினர் கரை ஒதுங்கி கிடந்த 3 ஏலக்காய் மூட்டைகளையும் காவல்துறையினர் கைப்பற்றி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் இந்த ஏலக்காய் மூட்டைகள் கடல்வழியாக இலங்கைக்கு கடத்திச் சென்ற போது கடலில் தவறி விழுந்து கரையொதுங்கியதா ? என்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |