தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குழப்பமும், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீடித்து வருகிறது. இதனால் தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது. இதையடுத்து ஒவ்வொரு கட்சியிலும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றது.
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகளும், பாஜகவுக்கு 20 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து குஷ்பூ தனக்கு சேப்பாக்கம் தொகுதி ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால் குஷ்புவுக்கு அந்த தொகுதி ஒதுக்க படாததால் அவரது ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளனர். இது குறித்து குஷ்பு டுவிட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “உண்மையான போராளி எதையும் எதிர்பார்ப்பதில்லை. எது சிறந்தது என்று கட்சிக்கு(பாஜக) தெரியும்” என்று ட்விட் செய்துள்ளார்.