தமிழக சட்ட மன்றத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி அதிமுக கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. மேலும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விருப்ப மனு தாக்கல் செய்து வருகிறார்கள். இதனையடுத்து ஒவ்வொரு கட்சியினரும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றி தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதிலும் சில காட்சிகளில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.
தங்களுக்கு உரிய தொகுதி ஒதுக்காததால் கூட்டணியில் இருந்து பிரிந்து சென்று வேறு கட்சியுடன் கூட்டணி அமைத்து வருகின்றன. அதன்படி அதிமுக கட்சியில் இருந்து பலரும் விலகிச் சென்று திமுக போன்ற பல கட்சிகளின் கூட்டணி வைத்துள்ளனர். அதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை ஒவ்வொரு கட்சியினரும் வெளியிட்டு வருகின்றன. ஆனால் திமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை இறுதி செய்யப்படுவதில் கடும் இழுபறி நீடித்து வருகிறது. கடந்த இரண்டு தினங்களாக திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூட்டணி கட்சிகளுடன் தொகுதிகள் நேற்று இறுதி செய்யப்பட்டன. இதனையடுத்து மீதம் 173 தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது. அதனைப்போலவே திமுகவின் தேர்தல் அறிக்கையை ஸ்டாலின் நாளை வெளியிடுகிறார்.