தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குழப்பமும், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீடித்து வருகிறது. இதனால் தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது. இதையடுத்து ஒவ்வொரு கட்சியிலும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றது. திமுக கூட்டணியில் உள்ள விசிகவுக்கு 6 தொகுதிகள், மதிமுக 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் புதுச்சேரியில் காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், திமுக 13 தொகுதிகளில் போட்டியிடுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் ,விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒரு தொகுதியில் போட்டியிடுகின்றன. வெற்றி பெற்றால்தான் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியும் என்று எதிர்பார்த்த நிலையில் திமுக காங்கிரஸ் எந்த கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறுகிறதோ அந்த கட்சி தலைமையில் ஆட்சி அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.